திரும்பி திரும்பி பார்க்கிறேன்

திரும்பி திரும்பி பார்க்கிறேன்
உன்னைக் காணாமல் கரைகிறேன்
விழிகள் இரண்டை வெறுக்கிறேன்
தினம் கண்ணீரில்  குளிக்கிறேன்

மனவறையில் வசிக்க வைத்துது
யார் செய்த மாயம்
மனம் இணைந்தப் பின்னாலே
சதிப் பிரிப்பதென்ன நியாயம்

காதல் என்பது நினைவு
அது கலையாத கனவு
அன்பே நீ உணர்வு
இணைந்திடுமா?  நம் உறவு

நேசமென்ற தீபம்  நம்மில் ஏற்றி
வைத்தது யார்?
பிரிவென்ற நெய்யை அதில் ஊற்றிவிட்டது யார்?

காதல் செய்தது பாவமா?
காலம் மாறிப் போகுமா!
கண்ணீர் மழை சாபமா?
கரங்கள் இரண்டும் இணையுமா!

காதல் என்பது நினைவு
அது கலையாத கனவு
அன்பே நீ உணர்வு
இணைந்திடுமா?  நம் உறவு

தீயில் மனதை எரிக்கிறேன்
நெஞ்சம் தீண்டப் பதைக்கிறேன்
ஊனுருகி எரிந்திட சாம்பலாகிறேன்
ஊற்றான நினைவிலே அமிலமூற்றுகிறேன்

மீண்டும் நினைவு அரும்புதே
மீள இயலாமல் துடிக்குதே
கண்கள் பார்வை இழக்குதே
கற்பூரமாய் மனம் கரையுதே

காதல் என்பது நினைவு
அது கலையாத கனவு
அன்பே நீ உணர்வு
இணைந்திடுமா?  நம் உறவு


வீதியெங்கும் ஓடினேன்
விண்ணைக் கூட சாடினேன்
கால்த்தடத்தை தேடினேன்
காணாமல் மனம் வாடினேன்

விம்மி விம்மி அழுகிறேன்
விடைபெற மனமின்றி  தவிக்கிறேன்
உன் வருகையின்றி துடிக்கிறேன்
உன் நினைவில் உறைகிறேன்

காதல் என்பது நினைவு
அது கலையாத கனவு
அன்பே நீ உணர்வு
இணைந்திடுமா?  நம் உறவு

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (29-Aug-20, 4:56 pm)
பார்வை : 99

மேலே