இசைஞானி இளையராஜா பற்றிய சில தகவல்கள்

இயற்பெயர் -- டேனியல் ராசையா என்கிற ஞானதேசிகன்

பிறந்த தேதி 2 - 6 - 1943

தந்தை -- டேனியல் ராமசாமி

தாயார் -- சின்னதாய்

சொந்த ஊர் -- பண்ணைபுரம் , தேனீ மாவட்டம்

கல்வி -- எட்டாம் வகுப்பு

மனைவி -- ஜீவா (சொந்த சகோதரியின் மகள் )

குழந்தைகள் -- கார்த்திக் ராக , யுவன்சங்கர் ராஜா , பவதாரிணி

சகோதரர்கள் -- பாவலர் வரதராஜன் , பாஸ்கர் , அமர் சிங் என்கிற கங்கை அமரன்

இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றினார்

1958 இல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் இவரது அம்மா வின் அறிவுரைப்படி இடையிடையே பாடினார் .

" என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலைவாழ்க்கை ஆரம்பமானது . அன்று பொன்மலையிலும் ,திருவெறும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார் " .

ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பெல்வேறு கிராமங்களில் கால்நடையாக பயணம் செய்து வாசித்துப்படி லட்சோப லட்ச மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர் .

கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரகராக கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .

ஆரம்ப காலங்களில் இளைஞராக பெண் குரலில் மட்டுமே பாடி வந்தித்திருக்கிறார் .

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன் என்று ஒரு தவமாக பரிணமித்து பயணித்திருக்கிறது அவரின் வாழ்க்கை .

பாட்டு கேட்பதற்காக வாய்கிருந்த வானொலியை விற்றுவிட்டு இளையராஜா , தன் சகோதரர்களோடு சென்னைக்கு ரயில் ஏறினார் .

மேற்கத்திய இசைக்கு இவரின் குருநாதர் தன்ராஜ் மாஸ்டர்

வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணக்கங்களை கற்றுத்தந்தார் தன்ராஜ் மாஸ்டர் .

பியானோ கற்றுக்கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர் .

ஹார்மோனியம் , கிடார் , பியானோ , கீபோர்ட் ,புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தார் .

கிளாசிக்கல் கிடார் இசையில் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் எட்டாவது கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர் .

சகோதரர்கள் முவரும் சேர்ந்து * பாவலர் ப்ரதர்ஸ் * என்ற இசைக்குழுவை நடத்திவந்தனர் .

1970 களில் வாத்தியக்கலைஞராக சலீல் சௌத்திரி இடம் பணியில் சேர்ந்தார் . பின்னர் இசையமைப்பாளர் ஜி கே .வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார் .

முதல் படம் * அன்னக்கிளி * ,தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவரைகளால் 1976 இல் ஆறுமுகம் செய்யப்பட்டார் .

இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவை *இளைய ராஜா என்று பெயர் சூட்டி அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தான் .

கதை , கவிதை, கட்டுரை ,பென்சில் படம் வரைவது , தான் எடுத்த புகைப்படங்களை சத்தமிட்டு வீட்டில் மாற்றுவது இலையறாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு .

பரிந்துரை -- இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்காது .

அன்னையின் மீது இவருக்கு பாசம் அதிகம் . அவர் சொன்ன வார்த்தையை இவர் ஒரு போதும் மீறியதில்லை . அம்மாவே இவரின் முதல் கடவுள் , முழுமுதற் தெய்வம் .

எத்தனை புகழ் பெற்றாலும் இசைஞானி என்று அழைக்கப்பட்டாலும் *பண்ணைபுரத்துக்காரர் * என்று அழைப்பதில் தான் தாம் பெருமைகொள்வதாக அவர் அடிக்கடி கூறுவார் .

கவிஞர் கண்ணதாசனின் பாடலுக்குத்தான் இவர் முதல் முதலில் திரையிசை அமைத்தார் . அதுபோல அவரின் கடைசி பாடலுக்கும் இவரே இசையமைத்தார் .

பண்ணைபுரத்தில் உள்ள சின்னதாய் அம்மாளின் நினைவிடமே இவருக்கு மிகவும் பிடித்த தியான இடம் .
பஞ்சமுகி என்ற கர்நாடக செவியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார் .

இவருக்கு *பத்ம பூஷன் * விருது வழங்கப்பட்டுள்ளது

*சங்கீத நாடக அகாடமி விருதும் பெற்றிருக்கிறார் .

இவர் இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார் .

சாகர சங்கமம் (தெலுகு ) ,சிந்து பைரவி (தமிழ் ) ருத்ர வீணை (தெலுகு ) பழசிராஜா (மலையாளம் ) தாரை தப்பட்டை (தமிழ்)

லண்டனில் *சிம்பொனி * இசை அமைத்து * மேஸ்ட்ரோ * பட்டம் பெற்றவர் . இந்த இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ள ஒரே ஆசியா பிரஜை இவரே .

இன்னும் வரும் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (30-Aug-20, 10:31 am)
பார்வை : 486

மேலே