அழிவுச்சூடி

அடிமை எண்ணம் வளர்த்திடு!

ஆற்றல் மொழியை ஒழித்திடு!

இன உணர்வைத் துறந்திடு!

ஈக்களாய் என்றும் வாழ்ந்திடு!

உண்மைக்கு துன்பம் செய்திடு!

ஊழல் செய்து பிழைத்திடு!

எழும் குரலை நெரித்திடு!

ஏய்க்கும் பதரை மதித்திடு!

ஐந்திணையை அழித்திடு!

ஒழுக்கத்திற்கு விடை கொடுத்திடு!

ஓய்வின்றி செல்வம் சேர்த்திடு!

ஒளவை சொன்னதை மறந்திடு!

அஃறிணையாய் என்றும் அலைந்திடு!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (30-Aug-20, 10:34 am)
பார்வை : 46

மேலே