தலையாட்டி பொம்மைகள்

தலையாட்டி வாழ்ந்தால்
நிலையானா வாழ்க்கை
கிடைக்குமோ ...
இல்லையோ
நிச்சயம் நிலைமாறாத
வாழ்க்கை இருக்கும்....! !

அம்மா அப்பா சொல்லுக்கு
தலையாட்டினால்
நல்ல பிள்ளை

உடன் பிறந்தவர்களின்
சொல்லுக்கு
தலையாட்டினால்
பாசமானவன்

மனைவியின் சொல்லுக்கு
தலையாட்டினால்
நல்ல கணவன்

மாமியாரின் சொல்லுக்கு
தலையாட்டினால்
நல்ல மருமகள்

மொத்தத்தில்
சொந்தங்களின்
சொல்லுக்கு
தலையாட்டினால்
நல் உறவு.

யாருக்கு எப்படி
தலையாட்டினாலும்
நிலையான தன்மையுடன்
நிலைமாறாத
தலையாட்டி பொம்மைகள்
கீழே வீழ்வதில்லை..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Aug-20, 4:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 88

மேலே