மண்வாசம்

மண்வாசம் வேணும்!
மணல் வீடுதான் வேணும்!
சொந்த மண்ணுல சொர்க்கமே இருக்கு!!
செரட்டையில சோறு பொங்கி!
செம்மண்ணுல பொம்மசெஞ்சி!
தெருவெல்லாம் ஊர்வலமாய்!
சிக்குபுக்கு ரயிலுவண்டி.!!
காசு ஒண்ணும் இல்ல!
கண்ணீரும் வந்ததில்ல!
குடிக்கத்தா பழையகஞ்சி!
குடிசை வீட்டுல!
குயில்களும் வந்து கூடுகட்டும்!
குட்டி வீட்டுல.!!
குளிரடிக்கும் குடிசை வீட்டுல!
குளிராமத்தா ஒளிஞ்சுக்குவோம்!
அம்மா சேலையில!!
மழை பெஞ்சா தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள!
ஓரமாத்தா ஒதுங்கிக்குவோம்.!!
மண்தரையிலத்தா படுத்துக்குவோம்!
மனபாரமெல்லாம் போயிடுமே.!!
மண் வீட்ட பார்க்கணும்!
அந்த!
மணல் வீட்ட பார்க்கணும்!
குடிசை வீட்டை பார்க்கணும்!
குடும்பத்தோட போகணும்.!!
கொஞ்சநேரம் தலைசாய்க்கணும்.!!
தூரத்து தேசத்து!
ஒய்யார மாளிகையில்!
இருந்து!
ஏங்கும் ஒரு மனம்.!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (2-Sep-20, 7:26 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 149

மேலே