திருமந்திரம் - 2

திருமந்திரம் -- பாடல் எண் - 317 , அசை பிரித்த பாடல்

-பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே "

வலுவற்ற கூரையால் வேயப்பட்ட இந்தப் பண்டம் (உடல் ) இறந்துவிடும்போது -ஐயோ * என் கணவர் இறந்துவிட்டாரே , *ஐயோ * என் தந்தை இறந்துவிட்டாரே என்று மனைவியோ , மக்களோ உடன் மடிவதில்லை . இவ்வுலகை விட்டு நாம் செல்லும் போது நமது பாவ புண்ணியங்கள் , தவத்தால் உணர்ந்த மெய்ஞ்ஞானம் மட்டுமே நம் கூட வரும் .

உலக வாழ்க்கையின் நிலையாமையை ,உறவுகளின் எல்லையை இந்த பாடல் மூலம் திருமூலர் சுட்டிக் காட்டுகிறார் . சமூகவியல் ஆய்வாளர்களுக்கு இப்பாடலில் ஒரு அரிய உண்மை ஒளித்து வைத்திருக்கிறார் திருமூலர் . *உடன்கட்டை * ஏறுதல் என்ற சமூக அவலம் திருமூலர் காலத்திலோ , ஏன் அதற்கு முற்பட்ட காலத்திலோ கூட தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பததை இப்பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம் .

அந்த காட்டிமிராண்டித்தனம் வடஇந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஆணாதிக்க சமூகத்தில் மட்டுமே வழக்கில் இருந்திருக்கிறது . பெண்ணை தாயின் வடிவமாக காணும் தமிழ் பண்பாட்டில் உடன்கட்டை ஏறுதல் ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள படவில்லை என்பதை உணரமுடியும் .

இன்னும் வளரும் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (2-Sep-20, 11:42 am)
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே