சாமியாடி ‌ பகுதி 3

சில நிமிடங்களின் மௌனத்திற்குப் பிறகு...... ஆமாம் முரளி கடைசி வருஷம் நான் காலேஜ்க்கு வரலை. எங்க அப்பா திடீரென்று சாலை விபத்திலே இறந்துட்டாரு. நான்தான் மூத்தவ .எனக்கு பின்னால ரெண்டு தங்கச்சி ஒரு தம்பி .குடும்பப் பொறுப்பு என்ன தத்து எடுத்துக்கிச்சி.
சாரி விஷாலினி .
ஓகே முரளி. அப்ப எனக்கு ஒன்னும் புரியல. ஏன் இப்படி ஆச்சுன்னு பக்கத்து கிராமத்தில் இருக்கிற சாமியாடி கிட்ட போய் கேளுன்னு சொன்னப்பஎன்னோட டாக்டர் அறிவு இந்த மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. வற்புறுத்தல் தாங்காம போனப்ப அந்த சாமியாடி சொன்னது என் மனசுக்குஆறுதலாகவும் நம்பிக்கைகொடுக்கறதாகவும்இருந்துச்சி.
வீட்டுக்கு வந்து யோசிச்சேன். இவங்க யாரு ?எப்படி சொல்றாங்க ?உண்மையிலேயே ஏதாவது அதிசயமான சக்தி இருக்கா? அமானுஷ்யசக்தியா?இது என்னன்னு ஆராயலாம்ன்னு என் மனசுக்கு தோனிச்சு. எந்தெந்த ஊர்ல சாமியாடி சொல்றாங்களோ அங்கெல்லாம் போனேன் .ஆறு மாசம் இவங்களோட அடிக்கடி கலந்து ஆராய்ச்சி பண்ணப்ப எனக்கு ஒன்னு நல்லா புரிஞ்சது.
சாமியாடி எல்லோருமே நம்பிக்கையா நேர் மறையா அதாவது பாசிட்டிவா சொல்றாங்க .அவங்க கிட்ட வர ஜனங்களும் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு யாராவது வழி சொல்ல மாட்டாங்களா நம்ம மனசை தேத்த மாட்டாங்களான்னு இருக்கிற மக்கள் .அவங்களின் மனச புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு தகுந்த மாதிரி நம்பிக்கை கொடுத்து நிலை தடுமாறாமல் அவங்களை தூக்கி விடுவது தான் இந்த சாமியாடியோட செயலாக இருந்தது புரிஞ்சது.
முரளி ஒன்னு சொல்லட்டுமா? நம்ம நாட்டிலே எல்லா மத மக்களுக்கும் கடவுள் நம்பிக்கை ரத்தத்திலே ஊறி இருக்கு. மனம் சாயும்போது மனம் கலங்கி செயல்படாமல் நிற்கும்போது மனோதத்துவ டாக்டர் கிட்ட போய் பிரச்சினையைச் சொல்லி மாத்திரை சாப்பிடுவதை விட சாமி நம்பிக்கை உள்ளவர்கள் சொல்ற மனோதத்துவம் அவங்க மனசுக்குள்ள ஒரு தன்னம்பிக்கையை விதைத்து விடுகிறது.நம்பிக்கையோடு வாழ ஆரம்பிக்கிறார்கள்.
ஓ அதனாலதான் இந்தத் துறையை நீ தேர்ந்தெடுத்தியா? முரளிதரன் வாய் திறந்தான்.
இருக்கலாம் .ஆனா சுயநலம் இல்லை .எந்த கட்டணமும் நிர்ணயிக்கலை. நான் படிச்ச மனோதத்துவ அறிவ நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்போதும் படித்துகிட்டு இருக்கிற மனோதத்துவ சிந்தனையை கடவுள் நம்பிக்கை மூலமா மக்களை பிரச்சனையில் இருந்து மீட்டு எடுக்கிறேன். என்னுடைய ஆலோசனையை மனோதத்துவ அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். வெற்றி பெற்று வெற்றி பெற்று நல்லா ஆனவுடன் அவங்க தர காணிக்கை ஏராளம். நான் இப்ப நல்லா இருக்கேன். மக்கள் நம்பறாங்க. அவங்க நம்பிக்கையை நான் வீன் அடிக்கல.
இது கடவுள் பெயரால் செய்கிற ஏமாற்று வேலை இல்லையா?
ஏமாற்றுதல் என்றால் என்ன ?நம்முடைய செயலாளல் மற்றவர்கள் துன்பப் பட்டாலும் தங்களுடைய பொருள்களை இழந்தாலும் மனவேதனை அடைந்தாலும் அல்லது அவங்ககிட்ட இருந்து நாம எதையாவது எதிர்பார்த்து சுரண்டி பிழைத்தாலும் அவர்களை ஏமாற்றதா அர்த்தம். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு அந்த நம்பிக்கை அவங்களுக்கும் இருக்கு .அந்த நம்பிக்கையே எங்களோட மனபலம். என்னுடைய மனோதத்துவ அறிவு அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது உதவி தானே தவிர ஏமாற்ற வேலை இல்லை.
சரியாச் சொன்னே விசாலினி .ஓகே மனோதத்துவ டாக்டர் அதே மருத்துவமுறையில் மக்களை தங்களுடைய மனப் பிரச்சினைகளில்இருந்து நீக்குவதற்குஇதுவும் ஒரு மருத்துவ முறைதான்னு நான் நம்புறேன். எப்ப சுயநலம் வந்து மக்களை ஏமாற்றாமல் இருக்கிறோமோ அதுவரைக்கும் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை மகிழ்ச்சி .உன்னுடைய பணி தொடரட்டும்.. முரளி எழுந்துகொள்ள ஜடா முடியுடன்சிரித்துக்கொண்டே வழியனுப்பினார் சாமியாடி.
நம்பிக்கை வழியே நலம் பயப்பது மனதிற்கு நலத்தை தான் தருமே தவிர தீங்கை தராது என்ற நல்ல முடிவோடு மனதில் அமைதிபொங்க வெளியில் வந்தார் டாக்டர் முரளிதரன்.
நிறைவாக.... நன்றி
(. இக்கதை கற்பனை என்றும் யாரையும் எதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லையென்றும் உறுதி கூறுகிறேன். இது மொழிபெயர்ப்பு அல்ல என்றும் சொந்த கற்பனை என்றும் உறுதியளிக்கிறேன்)

எழுதியவர் : சு.இராமஜோதி (5-Sep-20, 6:14 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 73

மேலே