கூகிள்- google

தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!

*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;
*ஊ*டகமாய் வந்தவளே!
*எ*த்தனை சேவைகள்தான் உன்னுள்ளே!
ஏறு முனையே உள்ளது;
*ஏ*ற்றத்தாழ்வு பார்க்காததால்,,
*ஐ*ம் பொறியும் கணிப்பொறியின் முன்பே,,
*ஒ*ரு சொல் தேடிய!, *ஓ*ராயிரம் முன்னிற்க,,,,,
*ஔ*வியமில்லா அன்னமே!!!!

உனை அழைக்கும் ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கையின் ஆரம்பமே;;;;;;

இப்படிக்கு
தென் தமிழ் கவிபாடும்
சிம்மயாழினி

எழுதியவர் : சிம்மயாழினி (7-Sep-20, 11:48 am)
பார்வை : 120

மேலே