முககவசம்

அம்மாவின்
வெள்ளிக்கிழமை சாம்பார் வாசம்
ஆச்சியின்
நெத்திலி அவியல் வாசம்
அப்பாவின்
சிகரெட் தூள் வாசம்
அவளின்
சீயக்காய் கூந்தல் வாசம்
அத்தனையையும் அழகாய் தடுத்து
உயிருக்கு மட்டும் உறுதி கூறுகிறது
பாழாய் போன
இருபது ரூபாய் முகக்கவச வாசம்

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:22 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 295

மேலே