ஒரே துளி

அங்கே ,
ஐந்து நட்சத்திர மண்டபத்தில்
வைர மாலை கழுத்துடன்
புகைப்படத்திற்கு புன்னகை
கொடுத்து நிற்கும்
அவளும்....
இங்கே ,
சாலையோர துணிக்கடையின்
முற்றத்தை சுத்தம் செய்து
பிளாஸ்டிக் பதுமைக்கு
நாகரீக உடை உடுத்த செய்யும்
இவளும்....
இப்பிரபஞ்சத்தில்‌ ஒரே மழைத்துளியில்
சிதறிய வெவ்வேறு முத்துக்கள் தான்

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:26 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : ore thuli
பார்வை : 176

மேலே