உழவனின் அவலம்

ஏர் பூட்டி ஊழுது விதைத்து விட்டோம் இனி விடிந்து விடும் வறுமை
என்று எண்ணி வியர்வை சிந்தி உழைத்திடும் உழவன் விடியலை நோக்கி

கதிரவனின் வருகை முன் கழனி சென்று கடும் உழைப்பை தந்து பசியாற வீடு திரும்பும் உழவனுக்கு கால் வயிறு கஞ்சியே மிஞ்சும்

வாங்கிய கடனும் வறுமையின் நிலையும் மாறிவிடும் காலம் கை
கூடி வந்ததே என்று மனம் நிறைய மகிழ்ந்த உழவனுக்கு

மாற்றம் வந்தது இயற்கை சீற்றம் என்னும் வடிவில் கனவெல்லாம் கரைந்தது கடும் மழையில்

கடனை எண்ணி மனம் கனத்த உழவன் மரணமே விடியல் என்று எண்ணி மாய்த்து கொண்டான் உயிரை

எழுதியவர் : த தமிழ்வாணன் மேல கல்லூர் (10-Sep-20, 10:47 pm)
Tanglish : ulavanin avalam
பார்வை : 104

மேலே