பொறாமை

பொறாமை

ஒரே ஒரு முறை
ஆழியின் அழகை இரசிக்க
கடற்கரைக்கு செல்கையில்....

பொறாமை கொண்ட அந்தக்
கடல் அலைகள்
நம்மை அதனுள் இழுக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை நம் பாதங்களை
அது வருடும் பொழுதும்..!!

பொறாமை கொண்ட அந்த
மணல் துகள்கள் கூட..
நம் பாதங்களை பொக்கிஷமாய்
அதனுள் புதைத்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை
நாம் கைகோர்த்து நடக்கும் பொழுதும்..!!

பொறாமை கொண்ட அந்த
உப்புக் காற்றும் கூட ..
நம்மை சிறைபிடித்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை அது நம்மை தீண்டும் பொழுதும்..!!

பொறாமை கொண்ட அந்த
மீன்களும் கூட..
குதித்து கரைசேர முயல்கிறது
ஒருமுறையேனும்
நம்மை கண்டிட மாட்டோமா
என்ற ஏக்கத்தோடு..!!

கடல் சாம்ராஜ்யமே
வியந்து உறைந்து நிற்கிறது ( பொறாமையில் )..
'நம்மை' போன்ற
ஓர் அற்புத காப்பியத்தை கண்டபின்..!!!

எனக்கோ பயம் ..
எங்கே கடல் மொத்தமும்
நம்மை காண வந்துவிட்டால்..
தூரத்து அலைகள் இப்பொழுதே உயர எழும்புகிறது..!
கடல் சீற்றத்திற்கும் ஆழிப்பேரலைகும்
நாம் காரணியாய் அமைந்துவிட கூடாதல்லவா..

வா செல்வோம்
நம் அன்பின் ஆழத்தை விடவா
இந்த ஆழியின் அழகு பெரிது..!!!

- கனிஷ்கா ஜெயக்குமார்

எழுதியவர் : கனிஷ்கா ஜெயக்குமார் (13-Sep-20, 3:30 pm)
Tanglish : poraamai
பார்வை : 183

மேலே