அந்தச் சில நொடிகள்

எப்போது அவன் வருவான்
யாருக்கும் தெரியவில்லை
மனம் துடித்துக் கொண்டிருக்கிறது
சில கேள்விகள் கேட்க
காலத்தாமதமாக வருவானோ?
இல்லை குறிப்பிட்ட காலத்திற்குள் வருவானா?
கண்கள் அயர்ந்து
நடை தளர்ந்தும்
நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்
அவனிடம் பேச
சென்ற நாட்களை திரும்பி பார்க்கிறேன்
கட்டாந்தரையில் கண்ணீர் மல்க
எடுத்தெறிந்து பேசினேன் அம்மாவிடம்
இன்றோ! அவள் இல்லை
விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டேன் சொத்திற்கு
வசிக்க வீட்டில் யாருமில்லை
செல்வத்தை சேர்க்க ஓடினேன்
சேர்த்தது செல்லரிக்கிறது எண்ணாமல்
பெட்டியை நிரப்பினேன் பட்டங்கள் வாங்கிப்
விட்டத்தை அலங்கரித்தேன் விருதுகளால்
பொருட்களைக் குவித்து புதுவீடு வாங்கினேன்
பொன்நகை  அணிந்தேன் புன்னகை இன்றி
உதறித் தள்ளினேன் உறவுகளை
உலகமே எனக்கு என்று
உறவுக் கொண்டாடினேன்
வெற்றி பெற்றேன் வாதம் செய்து
எல்லாம் கிடைத்தது
எனக்கே கிடைத்தது
அனைத்திலும் எனக்கு நிகரில்லை என
தலைக்கணம் கொண்டிட
தவிடுப்பொடியாக்கியது
என்னுள் பிணியேனும் விடம்
கதவைத் தட்டாமல்
உள்ளே வந்தான்
யாருக்கும் தெரியாமல்
என்னை அழைத்துச் செல்ல
கருத்த உடலெனினும்
சிரித்த முகம்
பாராபட்சமின்றி அனைவரையும்
நேசிக்கும் அன்பு உள்ளத்தை
கண் இமைக்காமல் பார்த்தேன்
ஆரத்தழுவி முத்தமிட்டு
ஆசையாய் அளாவிட
பெருக்கெடுத்து ஓடியது
கண்களில் கண்ணீர்
என்னை சீக்கிரமாக அழைக்க  என்ன காரணம் என்றதும்
நமட்டுச் சிரிப்பில் கூறினான்
கர்மாவின் பலனை கட்டாயம் அனுபவிக்க வேண்டுமென
இருக்கும் வரை நான் வாழ்ந்தது நான் வாழவில்லை
ஒருமுறை மீண்டும் வாய்ப்பு தா வளமுடன் வாழ என்றேன்
கொடுக்க விருப்பமே
கொடுத்தால் பூமி நிற்குமே
மற்றொரு வாய்ப்பு இல்லை என தெரிந்தும்
மக்கள் மடிந்து விடுகின்றனர் மாயையில் சிக்கி
சென்று கொண்டிருக்கிறது  எங்கோ என்னுயிர்
எரிந்து சாம்பலாகிவிட்டது எதுவும் மிச்சமின்றி என்னுடல்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (17-Sep-20, 2:25 pm)
பார்வை : 98

மேலே