கண்ணனை அறிவாய் மனமே
அழகிய மோட்டார் வண்டி
பழுது போகாது வரை - அதனுள்
இவன் அமர்ந்து ஒட்டும்வரை
முற்றிலும் பழுதுபோகையிலே
ஓட்டும் இவன் அதை விட்டு விட்டு
புதியதாய் வாங்கிய வண்டியில் இப்போது !
நமது உடம்பு அதுவே இந்த வண்டி
அதை ஓட்டுபவன் .......' ஆத்மா'...
உடல் அழிய... 'ஆத்மா' வேறோர்
உடலை, புதிய உடலை நாடி ஓடும்
உடல் அழியும் ஆத்மா வேறோர் உடலுள்
ஆத்மாவின் கர்மா மாறிவரும்
உடலைக் காட்டும் ...... தன்னுள் உறையும்
'பரமாத்மாவை' ஆத்ம உணர அது
;ஜீவன் முக்தி' அடையும் மீண்டும்
பிறப்பதற்கில்லை.... இதையே
கண்ணன் 'கீதையில்' உணர்த்துகிறான்
உணர்வது எப்படி ......
அவன் பாதம் துணை என்று பற்றும்
அகத்தை ஒழி நீ நீயல்ல அது உடல்
நீ உடலினுள் உறையும் ஆத்மா
அதனுள் உறையும் ஆத்மா பரமாத்மா
உன்னையும் பிரபஞ்சத்தையும் படைத்தது அளித்து படைத்தது
நடத்துபவன்..... அழிவில்லாதவன்
சர்வ வல்லமைப்படைத்தவன்
அவன் ஒருவனே அவனே கிருஷ்ணன், கண்ணன்
அறிவோம் இதை கடைத்தேறுவோம்