தெளிவு இல்லை

நேரம் காலம் போவதே தெரியாமல் போகுது
நேற்று குழந்தை இன்று இளைஞர்
நாளை முதியவர் என
வெகு வேகமாக நாட்கள் கடந்து
போகுது
சுவாரஸ்யமான நினைவுகள்
வெற்றி தோல்விகள்
விலைமதிப்பற்ற உறவுகள்
இழப்புகள் ஏக்கங்கள் சந்தோஷங்கள் என வந்து போகுது
வாழ்க்கை அவ்வளவுதான்...

இதை தாண்டி வாழ்க்கையில் என இருக்கு?

எழுதியவர் : உமாமணி (18-Sep-20, 10:39 am)
சேர்த்தது : உமா
Tanglish : thelivu illai
பார்வை : 456

மேலே