காதல்

அவள் நடையில் அன்னம்
தன்னைக் கண்டு தன்னையே மறந்து
நடவாது ஒதுங்கி நின்றது -அவள் பாட
அதில் தன்னைக் கண்ட குயில்
பாட மறந்து அவளையே உற்று நோக்க
அவள் ஆட்டத்தில் மயில் தன்னைக் கண்டு
ஆட மறந்து அவள் நடைப்பார்த்து அசர்ந்துபோனது
மலர இருந்த முல்லைப்பூ அவள் சிரிப்பில் மயங்கியதோ
முற்றும் மலர மறந்து மொட்டாய் இருக்க
அவளோ இதை ஒன்றும் அறியாது
ஆடி பாடி உள்ளமெல்லாம் இன்பம் நிறைய
குளத்தில் பூத தாமரையைக் கண்டு
சற்றே நின்றாள் அக்கணமே அங்கிருந்த
என்மனதில் புகுந்து கொண்டாள் என்னவளாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-20, 8:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே