நான் உயிரற்ற ஜீவன்தான் 555

ப்ரியமானவளே...


நான் தொட்டுவிடும் தூரத்தில்
நீ இல்லைதான்...

தினம் தொட்டு
பேசுகிறேன் நினைவில்...

தினம் தொட்டு அனைத்து
மடிசாய்ந்து உறங்குகிறேன்...

என் கனவில்...

கண்ணுக்கு தெரியாமலும் கைகளுக்கு
சிக்காமலும் இருக்கும் காற்று...

இந்து நிமிடம் இல்லை என்றால்
ஜீவன் பிரிந்துவிடும்...

கண்களுக்கு
தெரியாத தூரத்திலும்...

கைகளுக்கு எட்டாத தொலைவிலும்
நீ இருந்தாலும்...

இந்து நிமிடம் உன் நினைவு
என்னில் இல்லை என்றால்...

நான்
உயிரற்ற ஜீவன்தான்...

உன்
நினைவில் வாழ்கிறேன்...

நேரில் உன்னை
சந்திக்க காத்திருக்கும்...

அந்த இனிய
நாட்களுக்காக காத்திருக்கிறேன்.....முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Sep-20, 9:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 235

மேலே