கிராமத்து அழகி

'fair and lovely.... glow and lovely'
இவை எதுவும் கண்டதில்லை
கேட்டதும் இல்லை இவள் இந்த
கிராமத்து அழகு ராணி இவள்
முகம் உருக்கிய தங்கமாய்
தங்கத்தாமரையாய் ஒளிருது பார்
வெறும் கஸ்தூரி மஞ்சள் பூசி
குளித்து பொட்டிட்ட பூவையின்
குளிரொளி பெருக்கும் இன்முகம்
என் நெஞ்சில் நிறைந்த அழகுமுகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Sep-20, 8:37 pm)
Tanglish : kiramaththu azhagi
பார்வை : 268

மேலே