மஞ்சள் தோட்டம்

மஞ்சள் தோட்டத்தில் ஒரு மஞ்சள் மேகம்
மேகம் அது தரையில்
மஞ்சள் புடவை
மஞ்சள் பார்வை அது வஞ்சிப்பாவை
மஞ்சள் முகம்
மஞ்சள் மங்களம்
மஞ்சள் செடி
மஞ்சள் ஓவியமவள்
மஞ்சள் பூசியவள்
மஞ்சள் தோரணையவள்
மஞ்சள் முகபாவனை
மஞ்சள் கொஞ்சும் பார்வை
மஞ்சள் மஞ்சம் கொள்ளும் பேரழகியவள்
இடது கை முந்தானையில்
வலது கை குழலில்
கோதி நிற்கும்
கோடி கண் பார்க்கும் கோதையவள்

எழுதியவர் : கவிராஜா (20-Sep-20, 11:06 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : manchal thottam
பார்வை : 118

மேலே