இதழோடு இதழ் சேர

அன்பின் இறுதி நிலை ஆரத்தழுவுதல்
ஒரு பாலர் இருவர் எனில் ஒரிரு நொடிகளே
எதிர் பாலர் இருவர் எனில் எல்லை மீறப்படும்
அடர் கூந்தல் மணத்தினால் இறுக்கம் இறுகும்
தோல்களில் முகம் புதைத்து துழாவல் தொடங்கும்
இதழ்கள் துடிக்க எங்கும் முத்த மழை
பித்தம் போதையேற்றும் பேயாட்டம் உடல் துடிக்கும்
நகத்தால் கீறல் விழும் நரம்பில் தினவெடுக்கும்
பசை போல் ஒட்டிக் கொண்டால் பரவச நிலைவரும்
கன்னங்கள் சிவந்து விடும் கண்களில் அனல் வீசும்
பின்னங்காலில் சிறகு முளைக்க வானம் வசப்படும்
பிணைந்தோர் வியர்வையால் அங்கங்கள் நனையும்
இதழோடு இதழ் சேர நிற்குமிடம் சொர்க்கமாகும்
ஒருவர் துவளும் போதும் மாற்றவருக்கு புரவி பலம்
ஆடையுடன் அடுத்த கலகம் ஆரம்பமாகும்
அதன் பின்பே அன்பு அழற்சியால் தளருமே.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Sep-20, 7:17 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 187

மேலே