பெண்ணின் அன்பு

கூலியைப் பெற்றுக் கொண்டு
-குடித்தனம் நடத்து தற்குத்
தாலியைக் கட்டி னாலும்
-தாரமாய் ஏற்கும் ஆணை
வேலியா யிருப்ப னென்று
-விளக்கினை ஏற்றும் பெண்ணின்
போலியி லாத அன்பு
-புவிமேல் சிறந்த தன்றோ!
**
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Sep-20, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 429

மேலே