மலர்கள் அவள் முந்தானைக் கூடையில்

விரலின் மென்மையில்
விரைந்து உதிர்ந்தன மலர்கள்
அவள் முந்தானைக் கூடையில்
மென் விரல்களால் மீண்டும் தொடுப்பாயா
அல்லது அப்படியே அருச்சகரிடம் கொடுப்பாயா
என்று கேட்டன மலர்கள்
என் விரல்களால் தொடுத்து மாலையாக்கி
பின் ஆண்டவனுக்கு அணிவிக்கக் அருச்சகரிடம் கொடுப்பேன்
என்றாள் புன்னகையில் !
மலர்கள் மகிழ்ந்து கலகல வெனச் சிரித்தன
அவள் முந்தானைக் கூடையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-20, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே