முகநூல் பதிவு 114

உஷார்! உஷார்! உஷார்!

இன்று மாலை நான்கு மணிக்கு என் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.....

எடுத்து ஹலோ! வணக்கம்! யாருங்க? என்றேன் ...

மறுபக்கம் ஒரு வட இந்தியக் குரலில் ஒருவன் தமிழில் பேசினான் .....

அவன்: மேடம் நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்.....

நான்: பேங்க் மேனேஜரா...?
எந்த பேங்க் மேனேஜர்...?

அவன்: இன்டியன் பேங்க் மேனஜர் மேடம்.

நான்: ஓ! என்ன விஷயம்...

அவன்: எடிஎம் கார்டு... யூஸ் பண்றிங்கள்ல மேடம்... அது எக்ஸ்பைரி ஆயிடுச்சு..... இன்னிக்கு நைட்லேருந்து நீங்கோ பணம் எடுக்க முடியாது....நான் இப்போ ரெனியூவ் பண்ணப்போறேன்..... உங்கோ ஏடிஎம் கார்டு கூட உங்கோ ஆதார் நம்பரே அட்டாச் பண்ணனும்.....
கைல ஏடிஎம் கார்டு வச்சிருக்குதா ...?
அதை கொஞ்சம் பார்த்து நம்பர் சொல்லுங்கோ.....

நான்: நீங்க இன்டியன் பேங்க் மேனேஜர் தான்னு எப்டி நம்புறது....எனக்கு எங்க பேங்க் மேனேஜரை நல்லா தெரியும்.... அவர் வாய்ஸ் இல்லையே இது.....

அவன்: ஹலோ மேடம் ! நான் ஹெட் ஆபிஸ்லேருந்து பேசுறேன்.... உங்கோ நம்பர உடனே ரெஜிஸ்டர் பண்ணனும்... இல்லேனா... உங்கோ அக்கவுண்டு ப்ளாக் ஆயிடும்.......கைலே கார்டு இர்க்குதா?.... டக்குனு எடுத்து அதில இருக்கிற நம்பர சொல்லுங்கோ.... கொஞ்ச நேரத்தில உங்க மொபைல்க்கு ஓடிபி நம்பர் வரும்...அதை சொல்லுங்கோ... அப்புறம் உங்க பின் நம்பர் வரும்... அதை சீக்ரெட்டா வச்சிக்கிங்கோ....(என் ஏடிஎம் கார்டின் முதல் நான்கு எண்களை அவனே சொன்னான் )

நான்: சார்! நான் நாளைக்கு பேங்குக்கு நேர்ல வரேன் .... வந்து ரெனியூவ் பண்ணிக்றேன்....

அவன்: மேடம் என்ன நம்புங்கோ..... உங்க நம்பருக்கு ரெண்டு நிமிஷத்துல இந்தியன் பேங்லருந்து ஒரு மெசேஜ் வரும்.... வரலேனா... நீங்கோ இந்த நம்பர கம்ப்ளைண்ட் பண்ணுங்கோ...???

நான்: டேய்...ஃபிராடு... யார்கிட்ட கதவிடுற..... என் கார்டுக்கு 2024 வரைக்கு வேலிடிட்டு இருக்கு....

அவன்: (சற்று மிரட்டலாக ) மேடம் நீங்கோ இப்போ நம்பர் தர்லேனா.... உங்க நம்பர உடனே ப்ளாக் பண்ணிடுவேன்.... அப்புறம் அதிலேருந்து நீங்க பணமே எட்க்க முடியாது.... இனி ஏடிஎம் கார்டே யூஸ் பண்ண முடியாது.... அக்கவுண்டுல இருக்ற பணமும் அநாமத்தா போய்டும்...ஜாக்கிரதே....

நான்: டேய் பொறம்போக்கு..... யார ஏமாத்ற.... யார் அக்கவுண்ட்ட யார்டா ப்ளாக் பண்றது... முடிஞ்சா பண்ணிக்கோ...(இன்னும் கொஞ்சம் காட்டமாக நான் கத்த.... என் குரல் கேட்டு என் மகன் அறையை விட்டு வெளியே வந்தான்..... கையில் மொபைலை வாங்கி அவன் பங்கிற்கு ஆங்கிலத்தில் கண்டபடி ஏச.... தொடர்பு துண்டிக்கப்பட்டது)

மக்களே.... மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.... இப்படி அழைப்புகள் வந்தால்..... எந்தக் காரணம் கொண்டும் உங்கள் ஏடிஎம் கார்டு எண்ணையோ ஆதார் எண்ணையோ கொடுத்துவிடாதீர்கள்.... பெரிய ஏமாற்றும் வட இந்தியக் கூட்டம் அலைகிறது.....

அழைப்பு வந்த எண்..... +916296144977

எழுதியவர் : வை.அமுதா (23-Sep-20, 1:50 pm)
பார்வை : 54

மேலே