பாடல் சகாப்தமே

நீ நீளவான ஓடையில்
கலந்து விட்டாய்
வெண்ணிலாவை உறங்கவைக்க

பாடல் சகாப்தமே
பாடாமல் போனதென்ன

இன்னிசை குரல்
இறந்து போனதோ
தேனிசை குரல்
தேய்ந்து போனதோ
மெல்லிசை குரலே
ஒருமுறை பாடு
உன் குரல் இல்லாமல்
இனி பாடல்கள் ஏது

உன் சொல்லிசையும்
மெல்லிசையும் இல்லாமல்
இசைகளெல்லாம் இன்றுமுதல்
அனாதைதான்

பல்லவியை இழந்து
சரணம் வாடுதே
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
"இனி கீதமாகாது"

உங்கள் குரல் தீர்ந்ததால்
இதயம் கீறலானது
பாடல் சுமந்தவனை
பாடை சுமந்து விட்டது

நெஞ்சோடு எனக்கும்
சோகங்கள் இருக்கு
இந்நாளால்...

இளம் கவியரசு : அப்துல் பாக்கி

எழுதியவர் : (25-Sep-20, 7:57 pm)
பார்வை : 50

மேலே