SPB பாடிய நிலா

S.P.B. பாடிய நிலா

இணைகுறள் ஆசிரியப்பா

தேசிய மாணவர் படைக்குழுமம் அன்று
கோத்தகிரி யில்குழுமி டெண்டில் தங்கினர்
டெல்லியில் அடுத்த சுதந்திர தினவிழாவில்
கலந்து கொள்ள மாணவரைத் தேர்ந்தார்
இரவில் மாணவர் கலைநிகழ்ச்சி அதில்நீர்
இன்ஜினி யரிங்கல் லூரிசார்பில் பாடினாய்
நான்குளிரால் நேரில் வந்து கேட்கவில்லை
உன்பாட்டு அறுபத்தெட்டில் மலைமுகட்டில்
எங்கும் தேனாய் எதிரொலிக்க
நாங்களன்றே உன்குரல் அடையாளம் கண்டோமே

நேரிசை வெண்பாக்கள்
சினிமாவின் பாடகன் உன்முன்னே உன்பின்
சினிமா கணக்கிதைக் கண்டோம் -- இனியும்
நமக்கில்லை வேலையென்று தாமாய் எவரும்
அமளிசெய்யாப் போனார் விலகி

புரட்சி சிவாஜி புதுவரவாய் ஏற்றார்
புரட்சியாய் போட்டி தவிர்த்தாய் -- இரவு
பகலாய் பாடினாய் பாடி ஒலித்தாய்
அகன்றுமறை யாதுன் புகழ்

தியாகராஜர் சின்னப்பா கிட்டப்பா ஒன்னப்பா
ஜெயராமன் சௌந்தர ராஜனாம் -- தயாபர
கோவிந்ராஜ் ராகவன் லோகநாதன் எத்தனை
மாவித்தை பாடகர்வந் தார்

நின்வரவால் சீனிவாசன் கூடத் திணறினார்
எண்ணிலா ராகங்கள் பாடினாய் -- கண்ணீரும்
சோகமும் காதல் நெளிவு எதிலுமே
ராகப் பிசிரில்லை யாம்

பாடல்மொத் தம்சொல்லி மாளா துனதுபுகழ்
பாடல்நாற் பத்தாயி ரம்சொன்னார் -- பாடலால்
கின்னஸ் ரெகார்டை உடைத்தமா மன்னன்நீ
இன்னுலகெங் கும்நின் புகழ்

நிலாப்பாட்டு எத்தனை பாடி நிலைத்தாய்
உலாப்போகும் நேரமென் றாயே -- நிலாவின்
கலாப்பார்க்க மூச்சுவிடாப் பாடியநீ மூச்சில்
விலாவை விரிக்கமறந் தாய்




எழுதியவர் : பழனிராஜன் (25-Sep-20, 10:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

மேலே