ஆவுடையப்பன்

மதுரை விளாங்குடியில் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் 1950 களில் எஙகளுக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு ரயில்வேயில் பணிபுரிந்த திரு.வேலாயுதம் (யாதவர்) சுமார் 20 வருடங்களுக்கு மேல் குடியிருந்து, அப்பாவின் மேல் மிகுந்த அன்பு கலந்த நட்புடன் இருந்தார்.

அவரின் மகன் ஆவுடையப்பன் எங்கள் குடும்ப நண்பர். இவரை எனது இளமைப் பருவம் முதல் அறிவேன். இவருக்கு வயது 70. ரயில்வே மருத்துவ துறை மருந்தாக்கியல் பிரிவில் 37 ஆண்டுகள் பணி செய்து 2011 ல் ஒய்வு பெற்று கடையநல்லூரில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவார். அவருடைய இரண்டு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். சென்ற வாரம் இரவில் அமைதியாக மரணமடைந்தார்.

இவர் ’எழுத்து’ வலைத்தளத்தில் கவிதை என்ற பகுதியில் 2000 பதிவுகளும், கட்டுரை என்ற பகுதியில் 4000 பதிவுகளும் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவும் அவர் திரட்டியவையே. வலைத்தளத்தில் அவருக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்களுடன் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் பேசுவார். அவரைப் பற்றி, பெயர்க் காரணம் பற்றி அவரிடம் தொடர்பிலுள்ள வேலூரில் வசிக்கும் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பழனிராசன் 19-Mar-19 ல் எழுதிய நேரிசை ஆசிரியப்பாவினால் ஆன கவிதை.

நேரிசை ஆசிரியப்பா

அகர அண்டம் உகரப் பிண்டம்
அகர விந்து உகர நாதமாம்
உகரநா தமதில் விந்திணைய உயிராம்
அண்டநா தமதில் பிண்டவிந் துசேரவும்
அண்ட வுலகில் பெருகும் பிண்ட உயிர்
ஆண்பெண் சேர்க்கை எண்ணிக் கையிலாக்
கண்கா ணாத்தொழில் உலகின் பெருந்தொழில்
அண்டபூ மியிலித் தொழிலே பிரதானம்
ஆண்டவனே லிங்கமாய்த் தோன்றிச் சொன்னார்
உலகின் உற்பத்தியே லிங்கம்
ஆண்பெண் சேர்ந்த உருவாவு டையப்பனே. - பழனி ராஜன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-20, 5:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே