பேச்சாளர்கள்

பேசத் தகாதவைகளைப்
பேசக் கூடாதெனப்
பேசிக் கொண்டிருக்கையிலேயே
பேசத் தகாதவைகளைப்
பேசிக் கொண்டிருந்தவர்களின் முன்
எதையும் பேசாமல் இருந்துவிட்டேன்
பின்னர் அவர்கள் நான்
பேசாமல் இருந்ததுபற்றிப்
பேச ஆரம்பித்துவிட்டனர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Sep-20, 1:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : pechchaalargal
பார்வை : 45

மேலே