ஒரு கதை சொல்லட்டுமா

சாரளங்களின் இடுக்குகளில் நுழையும்
சருகுகளின் ஓசையில் மிரளும் மனம்
வல்லமை இழந்து கொண்டிருப்பதை
வெளிசூழ்ந்த இருளில் ஒளித்துவைத்து...

புதுப்பனி விரவிடும் மரங்கள் அவ்வழி
துளிக் கண்ணீரை தூது செழுத்த
துயர்தாங்கி வந்த வளி அந்தோ!,
வலியோடு உயிரேந்தி வந்ததோ...!

கனாக்காலச் சிறகுகள் கனத்துவிட்டதால்
நான்முனை எதிரொலிக்கும் உருவம்
சாரளத் துவாரத்தினூடே ஒளியாய் ஊடுருவி
வெண் துகிலுடுத்தி உயிர்தனை உய்த்திட...

மடந்தைப் பருவம் மாசறு வதனம்
நிந்தை கொள்ளா முகிழ்நகை அவளோ...!
மனதில் மடமை வருதல் இயல்பே
இனிதெனக் கருதி எப்படித் துயில்வேன்...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Sep-20, 9:12 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 62

மேலே