சிறந்த முடிவு

===============
விடுமுறை காலத்தில் வீட்டுக்குச் சென்று
திடுதிடு வென்றிறங்கித் தென்றல் – படுகிற
தேகச் சிலிர்ப்பில் திகைத்தவர் தேசத்தின்
மோகத் தில்லெடுதார் முத்து.
**
முத்தெடுத்த மோகம் முடிக்குந் தருணத்தை
தத்தெடுத்த காலமகள் தந்துதவ – சொத்தனைத்தும்
விற்றுண்ணும் ஏழ்மை விளையாட்டை நாட்டினிலே
கற்றுப் பதைத்தாரே காண்.
**
காண்பவர் கண்ணுக்கு காசுடையோ னென்றாகி
மாண்பொழுக நோக்கும் மதிப்புடைய – ஆண்பெண்
வெளிநாட்டில் செய்துவந்த வேலையற்றுப் போனார்
உளிசெதுக்கக் கல்லாய் உறைந்து.
**
உறைந்து கிடப்பார் ஒருவழியு மற்று
குறைந்த வருமானம் கொள்ள – நிறைவாய்
ஒருதொழிலு மின்றியே ஒவ்வொரு நாளும்
கருவாடா யானாரே காய்ந்து.
**
காய்ந்து கிடப்பார்தம் கண்ணீர் துடைத்தற்கு
ஆய்ந்து ஒருமுடிவை ஆள்வாரும் – ஓய்வெடுக்கும்
காலத்தி லேனும் உறுதியுடன் தானெடுத்தல்
சாலச் சிறந்த தவர்க்கு.
**
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Oct-20, 2:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 150

மேலே