இயற்கையில் இறைவன்

ஜப்பானில் பியுஜி எரிமலை......
மலையே ஜப்பானியருக்கு
'புத்தராய்' தோன்றுகிறதாம்
அவர்களுக்கு அது என்றும்
ஓர் புனிதமலையே
இன்றும் இந்த நவீன உலகில்
நம்பிக்கையே 'தெய்வம்'

நம் நாட்டில் .....
ஏழுமலையான் குடிகொண்ட
திருமலையே 'ஏழுமலையான்'
என்று நம்பி மலையேறி
ஏழுமலையானைக் கும்பிடுவார்
கோடான கோடி .......
இன்றும் இந்த நவீன உலகில்
நம்பிக்கையே 'தெய்வம்'


வடக்கில் நம்நாட்டில்
'கைலாச பர்வதம்'
பார்க்க பார்க்க பரவசமூட்டும்
மகாலிங்க ரூபம்
மலையே கைலாயம்
சிவ..... ஸ்வரூபம் .......
காரைக்கால் அம்மையார்
தலையால் நடந்து கைலாயத்தில்
ஐக்கியம் சிவனோடு .....
கூறும் புராணம் ....
நம்பிக்கையே தெய்வம்
இன்றும் இந்த நவீன உலகில் !

கோடான கோடியார் நம்புவார்
இயற்கையில் இறைவனை
நம்பாத சில மூடர் ......
இல்லை கடவுள் இல்லை என்று
கூறி திரிவார்
கலியுக இரணியர்கள்......
ஒரு நாள் வருவார் நரசிம்மர்
இவர்கள் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்க இக்கலியுகத்தில் ....
நம்புங்கள் நான் கூறுவதை
பக்தன் கூற்று பொய்யாவதில்லை
பக்தனுக்கே இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-20, 9:16 pm)
Tanglish : iyarkkaiyil iraivan
பார்வை : 213

மேலே