ஆசைக்குட்பட்டு மனதை

நீரின் ஓட்டம் புவியில் நீண்டால் ஆறு என்றாகும்
நிலத்தின் ஊட்டம் வளமென்றால் பயிர் செழிக்கும்
காற்றின் செறிவு அதிகமென்றால் மழை பொழியும்

அறிவும் படிப்பும் ஒருங்கிணைந்தால் பெருவெற்றியாம்
அனலால் நீரை ஆவியாக்கி முகர்ந்தால் அருமருந்தாம்
அறத்தால் செல்வம் கொழிக்கும் என்றால் நற்வழியாம்

கடின சூழல் கடந்து வாழ்வில் தெளிந்தாலே அனுபவம்
காண்போர் கூறிய சொல்லை ஆராய்ந்தால் நனிபுலமை
எதையும் எதிராய் நின்று நோக்கினால் தோல்வியில்லை

மனதை மனதால் அடக்குவதென்பது பெருங்கலையாம்
அறிவு என்பது மனதை வெல்லும் ஆசையினாலே
ஆசைக்குட்பட்டு மனதை செலுத்தினால் பெருந்துன்பம்

தோல்வியில் தவறி விழுந்தே இருப்பது மூடத்தனம்
துள்ளித்திமிரி எழுதுவதற்குக்கூட அனுபவம் வேண்டும்
அதிர்ச்சியால் உறைந்து ஆத்திரம் கொண்டால் நாசமே
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Oct-20, 9:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1098

மேலே