அளவோடு
அருவி நீரது குளித்திட மட்டுமே
அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
பெருமை மிக்கது சாதனை செய்தல்
பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே..
அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
துச்ச மாக எதையும் எணாமல்
துணிந்து தெளிந்து செயல்படு நீயே...!