நான் கூறும் தத்துவம்

அடுத்தடுத்து
தோல்விகளைக் கண்டவன் .
அத்தி வாரம்
உறுதியான
கட்டிடமாய் மாறுவான்.

அடி எடுத்து எடுத்து
வைத்திட வைத்திட
ஏமாற்றம் கொண்டவன்.
பலமான மரமாய் ஆகிறான்.

முயற்சி பண்ணப்
பண்ண வீழ்த்தப் படுபவன்.
இடி தாங்கும் நிலமாய்
பிடிவாதம் கொள்கிறான்.

விழுந்து எழுந்த பின்னே
விடா முயற்சியிலே
முழுமை அடைகிறான்.

தோல்வியைத் தோளில்
சுமந்து சென்றே
இறுதியில் தலையில்
கிரீடம் ஏற்றுகிறான்.

இதற்குக் காரணம்
வேறு ஒருவர் இல்லை
அவன் உள்ளே
இருக்கும் தன் நம்பிக்கை.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (6-Oct-20, 6:31 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 367

மேலே