விருந்து

இன்று கறியும் சோறும்
காரக் குழம்பும்
வீட்டுக்கு வா நண்பா என்றேன்

வெட்டிய ஆடு
வேகுது சட்டியில்
வந்தவன் வேகுறான்
வேகமா கூடவே..
டிவி என்ன விலை.?
சோபா என்ன விலை.?
வசதியா தான் இருக்க என...

ஒன்னா உட்கார்ந்து
விருந்து சாப்பிட்டு
கடைசியில் சொன்னான்
காரம் கொஞ்சம் கூடவென்று
சம்சாரம் முறைக்க
சட்டென குனிந்தேன்
வந்தவனை வாயப் பொத்தி
வழியனுப்பி
பின் நினைத்தேன்

வயித்துக்கு கீழ போனா
மறுநாள் காலை
மண்ணுக்கு போகும்
எதை தின்றாலும்...
கொன்றால் பாவமாம்..
தின்றால் போகுமாம்.!!

எழுதியவர் : மருத கருப்பு (8-Oct-20, 2:18 pm)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : virunthu
பார்வை : 190

மேலே