நகைச்சுவை துணுக்குகள் 25

இன்ஸ்பெக்டர், என் புருஷன் அஞ்சு நாளைக்கு முன்னே காய்கறி வாங்கப் போனவர் இன்னும் வீடு திரும்பவே இல்லை.

நீங்க அதுக்காக ஏன் கஷ்டப்படறீங்க? நீங்க போய் வேறே ஏதாவது காய்கறி வாங்கி சமைக்க வேண்டியதுதானே.
********************
சீனப்பிரதமர் Xi Chang (க்ஸீ சாங்) பேரை தூர்தர்ஷன்லே செய்தி வாசிப்பவர் Eleven Chang (பதினொன்றாம் சாங்) னு படிச்சார்னு அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்களாம்.  செய்தி

ஐயோ பாவம். அவர் 23ம் புலிகேசி, ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் மாதிரி, பதினோராவது சாங்னு நெனைச்சி அப்படி செஞ்சிருப்பாரு.
நல்ல வேளையாப் போச்சு, நம்ம ஊரா இருந்திருந்தா, அவர் பேரைத் தமிழ்ப் படுத்தரேன்னு சொல்லி சீ சாங்னு சொல்லி படுத்தி இருப்பாங்க. தப்பிச்சார்.
********************
குடிகுடியைக் கெடுக்கும்னு சொல்லிக்கிட்டு எங்கே பாத்தாலும் டாஸ்மாக் கடைகளை வெச்சி ஜனங்களை குடிகாரங்களா மாத்தறாங்களே. இது நல்லதா?

கென்னடி சொன்னார் "நாடு உனக்கு நல்லது செய்யுதான்னு பார்க்காதே, நீ நாட்டுக்கு நல்லது செய்"னு. அந்த மாதிரி டாஸ்மாக்னாலே உனக்குக் கெடுதல்னு நினைச்சிப் பார்க்காதே. அதனாலே அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய லாபத்தை நினைச்சி சந்தோஷப்படு.
********************
பப்ளிக் டெலிஃபோன் பூத்லே நானும் பாக்கறேன் அரை மணி நேரமா நீங்க எதுவும் பேசாம காதுலே ஃபோனை வெச்சிக்கிட்டே இருக்கீங்களே. நாங்க எப்ப பேசறது?


பொறுங்க சார் பொறுங்க. நான் என் வொய்ஃப் கிட்டே பேசிக்கிட்டு இருக்கேனில்லே. அவ பேசி முடிச்சப்பறம் தானே நான் பேச முடியும். அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?
********************
ஏண்டா பொசுக்கிற வெய்யில்லே நிக்கறே?

வேர்வை காயறதுக்காக நிக்கறேன்.

???????
**************

எழுதியவர் : ரா.குருசிவாமி (ராகு) (9-Oct-20, 6:58 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 109

மேலே