சாவுக்கு இரையாவான்

நாளெல்லாம் திருநாளானால்
திருநாளுக்கேது மதிப்பு !
நடையெல்லாம் , நாட்டியமானால்
நாட்டியத்திற்கு ஏது மரியாதை !

வாழ்வில் உழைப்பும் வேண்டும்
ஓய்வும் வேண்டும்
அப்பொழுது தான் உழைப்பும்,
ஓய்வும் மதிக்கப்படும்

உழைப்பை மட்டுமே
உறுதியாய் பற்றி நிற்பவன்
பேராசைக்காரனாவான்—அதனால்
உடலும், உள்ளமும் கெடும்

ஓய்வை மட்டும் விரும்புபவன்
சோம்பேறியாய் மாறிடுவான்
சோற்றுக்கு வழியில்லாமல்
சோகம் சூழ, சாவுக்கு இரையாவான்

எழுதியவர் : கோ. கணபதி. (9-Oct-20, 1:36 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 47

மேலே