உன்னோடும் உன் நினைவோடும்

என்னவளே
உனைவிட்டு வெகுதூரம்
பயணித்து வந்துள்ளேன்
என்னோடு இருப்பது
உன் நினைவுகள் மட்டுமே

நீ தந்த முத்தம்
உன் வசீகரமான பார்வை
உன்னோட அந்த கபடமற்றச் சிரிப்பு
உன் குழந்தைத்தனமான பேச்சு
இன்னும் எத்தனையோ

ஒரு நாள்
என் உடமைகள் ஒன்றில்
உன்னோட ஒரு ஒற்றைத் தலைமுடி
ஒட்டிக்கொண்டு வந்திருப்பதை
நான் கவனித்தேன்

அதன் மீதும்
எனக்கு காதல் வந்தது
ஒவ்வொரு நாளும்
அதை என் விரல்களோடு
சுற்றி ஆசையாய் வருடி விடுவேன்

இங்கிருந்து
உனக்கு பூச்சூடுவதுப்போல் பாவித்து அந்த தலைமுடியை
ஒரு மஞ்சள் ரோஜாவுக்கு
சூடிப்பார்த்தேன்

ஆ...ஆ...
என்ன ஒரு அழகு
ஒரு ரோஜா முடி சூடிக்கொண்டது...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Oct-20, 8:48 am)
பார்வை : 272

மேலே