பளிச்சிடும் கண்ணழகி

பளிச்சிடும் கண்ணழகி


நேரிசை வெண்பா
..
தளிர்நிற மேனி பளிங்குமுத்துப் பற்கள்
ஒளிர்வேலொக் குங்கண்ணாம் மங்கை -- களிக்கும்
நறுமணங்கொள் வேய்குழல் மென்தோ ளணங்கு
உறுப்பும் சிறக்குமாஞ் சொல்


மூங்கில் போன்ற மெல்லிய தோள்களையுடைய என்காதலி முத்துப்போன்ற பற்களையும்
தளிர் போன்ற மென்மையான மேனியும் வாசமுள்ள உடலழகை கொண்டவளும்
ஒளிறு கின்ற வேலை ஒத்தக் கூ ரியக் கண்களையும் உடையவளாவாள்.ஒவ்வொரு அங்க
மும் சிறப்புப் பொருந்தியதாகும்

4/3. குறள்

எழுதியவர் : பழனிராஜன் (23-Oct-20, 3:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 181

மேலே