அவன் யார்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
என்பது ஆன்றோரின்
வாக்கு....!!!
பிராணவத்துள்
ஒளி என்பார்
பேசாத
பிரமம் என்பார்
அடிமுடியில்லாதவன்
என்பார்...!!
ஊனக் கண்களுக்கு
தெரியாதவன்
ஞான கண்களுக்கு
தெரிபவன்..!!
ஆனால்...
நம் உள்ளத்தில்
இருந்து கொண்டே
நம்மை ஆட்டி வைத்து
காத்து அருள்புரிவான்...!!
--கோவை சுபா