தனிமைச் சிறை

பெய்யும் பெரும் பெயல்
அஞ்சிய வாடை
பனியோடு கைகோர்த்து
என் வாசல் தஞ்சம் சேர
நெஞ்சோடு கைகோர்த்து
நான் நடுங்கும் நள்ளிரவு...

செங்கால்நாரை இணைசேர
சிதறிய வெண்தூவல் ஒருசேர
கோர்த்த மெத்தை
நீயின்றி வெறுமை தர
பனிதூங்கும் குளிர் விழிகள்
வேதனை தாளாது பனிசிந்த
வாட்டுதே இரக்கமில்லா என் இரவுகள்...

தொலையும் தேகம்
தொலையா உன் நினைவுகள்
உள்ளத்தில் உருளும் உணர்ச்சிகள்
அரபிக்கடலாய் சித்தத்தில் மோதிச் சிதற
இதயம் கனவு போல் குழம்பி நோக்க
என்நிலை நீயின்றி தனிமைச் சிறை
உணர்கிறேன் முழுமையாய்...

ஏங்குதே என் நாழிகை
உன் அமிழ்த மார்பில் நான் முகிழ
இதயம் அள்ளிப் பருகும்
உன் தண்டாக்காதலை நான் சுவைத்து
நாம் முயங்க வேண்டும் என்றே....
மீண்டும் மீண்டு வா என் காதலா..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (5-Nov-20, 5:16 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : thanimaich sirai
பார்வை : 2662

மேலே