மகிழ்வோடு வாழ்வோம்

மாண்டவர்கள் மீள்வதில்லை
மாளாமல் வாழ்வார்
யாருமில்லை பூமியில்..!!

இவ்வுலகைவிட்டு
போகும்போது
தனக்கு உரிமையென்று
சொல்லி எடுத்து செல்ல
ஏதுமில்லை பூமியில்...!!

இந்த உண்மையை
உணர்ந்து கொண்டு
வாழ்ந்தால் துன்பமில்லை
நம் வாழ்க்கையில்...!!

நம்மிடம் இருப்பதை
பிறர்க்கும் கொடுத்து
நாமும் வாழ்வோம்
மகிழ்வோடு பூமியில்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Nov-20, 5:21 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : makizhvodu vaazhvom
பார்வை : 192

மேலே