நாமும் காரணம் தான்!

அழிவும் மலருதே
உலகமே சிதையுதே
கண்ணீர் பெருகுதே
தண்ணீரும் தேவையா?...

விளைந்து நின்ற நிலம்
வெயிலில் கருகி விட்டதால்
காலம் சென்றவுடன்
உலகம் பசியின் பிடியில்...

உலகின் நிலை கண்டதும்
வானம் கொஞ்சம் சோருமா!
வானின் முகம் சோர்ந்திட
நிலத்தின் நிலை மாருமா?

வானம் மட்டும் காரணம் இல்லை
வாழ்கின்ற மக்கள் நாமும் தான்!

எழுதியவர் : Sahul Hameed (8-Nov-20, 12:25 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 45

மேலே