மிஞ்சும் இன்பமே

அழகிய வாழ்வில்
கொஞ்சும் மழலையாய்
கொட்டும் சொற்களில்
கொப்பளிக்கும் புன்னகையில்
மனங்களின் புழகாங்கிதம்
சொல்லமுடியாத
சுகம் தரும் சொர்க்கம்,,
பிஞ்சு முகங்களில் தவழும்
தெய்வீக சிரிப்பு
கோடி கொடுத்தாலும் வராத சுகம் ,
இன்பத்தின் ஊற்று
தேனை பாலாக தெவிட்டாத
இனிய உணவாக உள்ளமெல்லாம்
நிறைகின்ற சுகம்
கொஞ்சும் மழலை தரும்
மிஞ்சும் இன்பமே ,

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Nov-20, 8:02 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : minjum inbame
பார்வை : 240

மேலே