கொக்கு

"காத்திருந்து காத்திருந்து கொக்கனேன்,
காலம் மாறியதை
அறியாத மக்கானேன்,

வெறும் கனவுகளில்
பறந்தனவே மாதங்கள்,
வலிக்கிறது 'நீ ரோஜா' என்று
வருடி கொஞ்சிய பாதங்கள்,

ஒற்றைக்காலில் நான்
செய்யும் தவம் ,
நீ வரவில்லை என்றால் ஆகிவிடுவேன் சவம்.

துணை நீ வருவாய் என்று காத்திருந்தேன்
கால்களுக்கு வலிக்கவில்லை,
காதலுக்கு வலிக்கிறது,

நோயாக்கி ஓடியவனே!
மருந்தாகி ஓடி வா!."

எழுதியவர் : Lakshya (11-Nov-20, 7:11 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kokku
பார்வை : 170

மேலே