ஆசானின் புகழ்



ஆசானின் புகழ்

நேரிசை வெண்பாக்கள்

துறைநிறைவில் வாரணிப் போளூர் பழனம்
முறைவிட்டுக் கல்வியைத் தேர்ந்தீர் -- பிறையும்
நிறைநிலவாய் நின்வெளிச்சம்
துறையில் விரியும் புகழ்


கிழக்குத் தமிழைத் தேர்ந்திளங்க லையில்
பிழக்கின்றி பட்டத்தைப் பெற்றீர் -- வழக்குமாறாய்
ஆங்கிலப் பாடம் முதுகலை சேர்ந்துநீவீர்
வேங்கை யெனவெளிவந் தீர்


தமிழறிஞர் ஆங்கிலத்தில் தத்துபித் தென்பர்
தமிழாங்கி லத்திலறி ஞர்நீர் --- தமித்து
தமிழ்துறந் தாங்கில ஆசானாய் சென்றீர்
துமித்திட மாணாக்கர் கும்


கலித்துறை

ஆயி ரமென்ன பலலட்சம் மாண வர்க்கு
மாயி ரம்சொல் பதியும்வ கையில் சொன்னீர்
தாயி னுமேலாய் மொழியும் கற்பித் தீரே
வாயி னின்மொழி யுடைஜாலம் கற்பித் தீரே


கற்பிக்கும் போதே படித்தீர் முதுநிலை
கற்பிக்கும் பட்டப் படிப்பையும் -- கற்றதை
மற்றவர்கு கற்பித்து ஏற்றத்தை யின்றுகண்டீர்
நற்றமிழி னையுமேற்று மின்




எழுதியவர் : பழனிராஜன் (11-Nov-20, 3:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே