மெய்யும் பொய்யும்
கண்முடி அமர்ந்திருப்போர்
எல்லோரும் முனிவரல்ல
கண்விழித்து பார்ப்போர்
எல்லோரும் உத்தமரல்ல..!!
அதுபோல்..
கண்முடி கொண்டு
இருப்பவர்கள்
உறங்குவதில்லை...!!
கண்விழித்து பார்ப்போர்
காண்பது எல்லாம்
உண்மையுமில்லை..!!
நம் உள்ளத்தில்
உணர்வுகள் என்றும்
உறங்குவதில்லை
நம் எண்ணத்தில்
உதிர்க்கும்
உணர்வுகள் எல்லாம்
உண்மையுமில்லை..!!
நம் வாழ்க்கையில்
பல நேரங்களில்
பல இடங்களில்
பொய்யை மெய்யாக
பேசுவோர்க்கு புகழாரம்..!!
உண்மையை பேசும்
மனிதர்களுக்கு
என்றும் எங்கும்
மதிப்பு என்பதில்லை..!!
--கோவை சுபா