எண்ணி துணிந்தேன்

எண்ணி துணிந்தேன்
துணிந்த பின் எண்ண லாமா .....

அவளை தொடர்ந்து செல்ல எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

அவளிடம் காதலை சொல்ல எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

அவளை தொட்டு அணைக்க எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

அவளை தொட்டு தாலி கட்ட எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

அவள் பெற்றோர் சம்மதம் கேட்க எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

அவள் வீட்டு கதவை தட்ட எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

வாயில் திறந்த அவள் அன்னையிடம் என்னை
அறிமுக படுத்த எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

பேச சொற்களை எண்ணினேன்
துணிந்த பின் எண்ண லாமா ....

தர்ம அடி கிடைத்தால் ....எண்ணினேன்
எடுத்தேன் ஓட்டம் ....
துணிந்த பின் எண்ண லாமா ..

எழுதியவர் : லோகநாதன் (17-Nov-20, 7:11 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : yenni thuninthen
பார்வை : 165

மேலே