மழைக்கால நட்சத்திரங்கள்

மழைக்கால ராத்திரியில் அவள்
மார்புச் சூட்டில் இடம் பிடிக்க
முந்துவதேன் நட்சத்திரங்களே

அவள் சூட்டில் உருகிப்போவதில்
காதல்நோய் தீருமென்றால்
என்னையும் கூட்டிச் செல்லுங்களேன்

கட்டில் இல்லை மெத்தை இல்லை
கம்பளியும் இல்லை ஒளியும் இல்லாத
இருளில் அவள் அணைப்பில்
அடங்கும் ரகசியம் பகிருங்களேன்

ஓயாத மழையில் தீராத வாசனை
இருந்தும் வியர்வை துளிகளாய்
அவள் தேகத்தில் நீங்கள் எப்படி
உளறாமல் பதில் சொல்லுங்களேன்

பசியும் இல்லை பாலும் இல்லை
சுவைத்தால்தான் உண்மை புரியும்
ஆனாலும் அவளை எனக்கு
விட்டுக் கொடுக்க மனமில்லாத
காரணத்தை சொல்லுங்களேன்...

எழுதியவர் : மேகலை (17-Nov-20, 11:51 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 114

மேலே