சற்றே சரிந்த குழலே - கட்டளைக் கலித்துறை

1957 ல் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் G.ராமநாதன் இசையமைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக T.M.சௌந்தரராஜன் பாடிய பாடல் ’வடிவேலும் மயிலும் துணை’.கம்பர் மகனான அம்பிகாபதி சோழ அரசன் மகளான அமராவதியை விரும்பியதால் அரசன் வெறுப்புற்று, காமக் களிப்பின்றி அருட்சுவையுடன் 100 பாடல்கள் அம்பிகாபதி பாடிவிட்டால் அமராவதியை மணமுடித்துத் தருகிறேன் என்பார்.

அம்பிகாபதியும் ஒப்புக் கொண்டு பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலை ஒன்று என்று எடுத்துக் கொண்டு, 99 பாடல் பாடியதும் 100 பாடி விட்டதாக எண்ணி அம்பிகாபதியின் முன் அமராவதி வர, காமச்சுவையுடன் கூடிய சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம் என்ற பாடலை அம்பிகாபதி பாடி விடுவார்.

இப்பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.அதனால் போட்டியில் தோற்றதாகத் தீர்ப்பளித்து அம்பிகாபதிக்கு மரண தண்டனை கொடுத்து விடுவார்.

’சற்றே சரிந்த குழலே’ பாடலைக் கேட்டவுடன் என்ன வகைப் பாடலாக இருக்கும் என்று சிந்தித்தேன்; இப்பாடல் ஒரு அருமையான கட்டளைக் கலித்துறை ஆகும்.

கட்டளைக் கலித்துறை

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே அசைய குழையூச லாட.. துவர்கொ(ள்)செவ்வாய்
நற்றே னொழுக நடனசிங் கார நடையழகின்
பொற்றே ரிருக்க தலையலங் காரம் புறப்ப(ட்)டதே.

அம்பிகாபதி - அமராவதி கதையே கற்பனை எனப்படுவதால் இப்பாடலை எழுதியவர் யார் என்ற விபரம் கிடைக்கவில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-20, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 201

மேலே