உறவி மிஞிறு அரவத்தோடே

செழுமையால் நிறைந்தது இப்புவி கோளம்
ஆழமாய் போழ்வது அறம் சார்ந்தது தானோ
திரவிய நசைக் கொண்டு பிளந்தோமென்றால்
பொசிவாய் சிதைந்து நீறாய் உதிரும்
குழிசி உடைந்து நீரால் அசம்பாவதைப்போலே
கோள புவியும் சிதைவில் தபுதலாகுமே
நோனார் சிதைத்த கோட்டையைப் போலே
நொவ்வல் சூழ்ந்து கவ்வை வருமே
மனாலம் போலே மண்ணினை நினைத்தால்
அல்கல் என்றும் ஆனந்தம் தானே
அடர்வாய் மரங்கள் நடுவதில் முடுகானால்
கருநிலம் எல்லாம் பொன் மயமாகும்
மங்குல் சூழ்ந்து பிடுகோடு மழை ஊற்றும்
உறவி மிஞிறு அரவத்தோடே ஒய்யார மந்தியும்
அரம்பாய் ஆனந்தத்தோடே வாழும் பாரீர்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Nov-20, 10:11 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 96

மேலே